/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் ரேக்ளா பந்தயம் சீறிப்பாய்ந்த காளைகள்
/
ஈஷாவில் ரேக்ளா பந்தயம் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : மார் 18, 2024 01:02 AM

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷா யோகா மையத்தில், 'தமிழ் தெம்பு' திருவிழாவின் நிறைவு நாளில் நடந்த, ரேக்ளா பந்தய போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.
கோவை ஈஷா யோகா மையத்தில், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை போற்றி கொண்டாடும் வகையில்,  'தமிழ் தெம்பு' திருவிழா கடந்த, 9ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.
நேற்று, ஈஷா யோகா மையத்தில் முதல் முறையாக, மாபெரும் ரேக்ளா பந்தயம் நடந்தது. 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளில், போட்டி நடந்தது. இதில், கோவையில் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 400க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
ரேக்ளா பந்தய போட்டியில், பங்கேற்ற காளைகள், எல்லை கோடுகளை நோக்கி சீறிப்பாய்ந்தன. இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்,  மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

