/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
/
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : அக் 28, 2024 11:39 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, பகவதிபாளையம் தனியார் லே-அவுட்டில், தி.மு.க., பவள விழாவை முன்னிட்டு, கிணத்துக்கடவு பேரூர் கழகம், நெ.10. முத்தூர் ஊராட்சி தி.மு.க., மற்றும் ரேக்ளா தலைமை சங்கம் இணைந்து ரேக்ளா பந்தயத்தை நடத்தியது.
பேரூராட்சி தலைவர் கதிர்வேல் வரவேற்றார். கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், கிணத்துக்கடவு செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ரேக்ளா சங்க தலைவர் ராம், செயலாளர் காளிமுத்துராஜன், பொருளாளர் பிரபு மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில், 200 மீட்டர் பந்தயத்தை மாவட்ட செயலாளர் முருகேசனும், 300 மீட்டர் பந்தயத்தை எம்.பி., ஈஸ்வரசாமியும் துவக்கி வைத்தனர்.
போட்டிகளில், 600 காளைகள் பங்கேற்றன. பந்தயத்தில் வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு, முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த காளைகளுக்கு, கோப்பைகளும் வழங்கப்பட்டன.