UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
கோவை: கரூர் அருகே மூர்த்திபாளையம்–புகழூர் ஸ்டேஷன்கள் இடையே வரும் 6, 8, 10, 13, 15, 17ம் தேதிகளில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இந்த தேதிகளில், பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30க்கு திருச்சி புறப்படும்(16844) ரயில் புகழூர் ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தபின் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக புகழூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும்.
அதேபோல், கோவையில் இருந்து காலை 8:00க்கு நாகர்கோவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி வழியாக இயக்கப்படும். வடகோவை, பீளமேடு, திருப்பூர் வழியாக செல்லாது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
