/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஏப் 09, 2025 12:38 AM
கோவை; போத்தனுார் - கோவை இடையேயான தண்டவாள பராமரிப்பு பணிகளால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
n பாலக்காடு - திருச்சி(16844) ரயில், நாளை முதல், 25 ம் தேதி வரை, போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை சந்திப்பு, வடகோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்கள் செல்லாது.
n பொள்ளாச்சி - கோவை(56110), சொரனுார் - கோவை(56604), மதுரை - கோவை(16722) ஆகிய ரயில்கள், நாளை முதல் 25ம் தேதி வரை, போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.
n மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66611), ரயில், நாளை முதல், 25 ம் தேதி வரை, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்.
n போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612) ரயில், நாளை முதல், 25 ம் தேதி வரை, கோவையில் இருந்து புறப்படும்.
n பாலக்காடு - கோவை(66606) ரயில், வரும், 13, 20, ஆகிய நாட்கள் தவிர, நாளை முதல், 25ம் தேதி வரை, பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.
n கோவை - கண்ணுார்(16608) ரயில், வரும், 16ம் தேதி தவிர, 11 முதல், 21 ம் தேதி வரை, கண்ணுாரில் இருந்து போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.
n ஆலப்புழா - தன்பாத்(13352), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) ஆகிய ரயில்கள், வரும், 16 ம் தேதி தவிர, 11 முதல், 21 ம் தேதி வரை, போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். குறிப்பிட்ட நாட்களில், இவ்விரு ரயில்களும் போத்தனுாரில் நின்று செல்லும்.
n திருவனந்தபுரம் - மும்பை(16332) வரும், 12, 19ம் தேதிகளில், போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.
n திருநெல்வேலி - பிலாஸ்பூர்(22620) ரயில், 13, 20 ம் தேதிகளில், போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் இவ்விரு ரயில்களும் போத்தனுாரில் நின்று செல்லும்.