/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள்; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஜூன் 11, 2025 07:34 PM
கோவை; தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போத்தனுார் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக வரும், 14 ம் தேதி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பாலக்காடு டவுன் - திருச்சி(16844) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும். கோவை, வடகோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்கள் செல்லாது.
பாலக்காடு - கோவை(66606), பொள்ளாச்சி - கோவை(56110) ஆகிய ரயில்கள், போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66611) ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.
போத்தனுாரில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்படும் போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612) மெமு ரயில், போத்தனுாருக்கு பதில் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 9:55 மணிக்கு புறப்படும்.