/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாளம் சீரமைப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
தண்டவாளம் சீரமைப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாளம் சீரமைப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாளம் சீரமைப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஆக 20, 2025 01:01 AM
கோவை; போத்தனுாரில், தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கண்ணுார் - கோவை(16607) எக்ஸ்பிரஸ், 22, 26ம் தேதிகளில் பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66615) மெமு ரயில், கோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.
கோவை - மதுரை (16721) எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில், பொள்ளாச்சியில் இருந்து மதியம், 2:30 மணிக்கு புறப்படும். கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது.
போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66616) மெமு ரயில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்படும். போத்தனுார் - கோவை இடையே இயக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.