தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு போக்குவரத்து நெருக்கடிக்கு வரும் தீர்வு

 ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு போக்குவரத்து நெருக்கடிக்கு வரும் தீர்வு

 ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு போக்குவரத்து நெருக்கடிக்கு வரும் தீர்வு


ADDED : மார் 07, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: துடியலுார் இடிகரை சாலையில், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் புதிய ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட உள்ளது.

துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி, லெவல் கிராசிங்கை தினமும் 100க்கணக்கான வாகனங்கள் கடந்து சென்றன. கோவை --- மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயில் தினமும், 10 முறை கடந்து செல்வதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதில், ரூ.32 கோடி மதிப்பில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்தாண்டு பணிகள் துவக்கப்பட்டன. பணிகள் முதலில் தொய்வாக நடந்தாலும், படிப்படியாக வேகமெடுத்தன. தற்போது, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ரயில்வே லெவல் கிராசிங் நெருக்கடி இல்லாமல், மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து என்.ஜி.ஜி.ஓ., காலனி வழியாக இடிகரை, வையம்பாளையம், கோவில்பாளையம் சென்று சத்தி சாலை, அவினாசி சாலை செல்லலாம். கோவை நகருக்குள் சென்று மீண்டும் மேட்டுப்பாளையம் சாலைக்கு வாகனங்கள் வருவது வெகுவாக குறையும். நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும். மேலும், இடிகரை, வையம்பாளையம், அத்திப்பாளையம், செங்காளிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு தினசரி பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்பவர்கள், போக்குவரத்து நெருக்கடி இன்றி சுலபமாக சென்று வர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us