/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் அடைப்பு
/
பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் அடைப்பு
ADDED : ஜூன் 26, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பராமரிப்பு பணிகளுக்காக, பொள்ளாச்சி - குஞ்சிபாளையம் ரயில்வே கேட் இன்று முதல், 29ம் தேதி வரை மூடப்படுகிறது.
பொள்ளாச்சி -- மீனாட்சிபுரம் ரயில் பாதையில், குஞ்சிபாளையம் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று காலை, 9:30 மணி முதல் வரும், 29ம் தேதி காலை, 9:30 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சிங்காநல்லுார் - சீனிவாசபுரம், அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.