/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் இன்று மூடல்
/
பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் இன்று மூடல்
ADDED : ஏப் 28, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே பத்ரகாளியம்மன் கோவில் ஒட்டி, ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தைப் பயன்படுத்தியும் மாக்கினாம்பட்டி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று திரும்புகின்றனர்.
இந்த கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று, (28ம் தேதி) காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக, கோட்டூர் பஸ் ஸ்டாப் வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகவலை, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

