/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே கேட் சேதம்: லாரி டிரைவருக்கு சிறை
/
ரயில்வே கேட் சேதம்: லாரி டிரைவருக்கு சிறை
ADDED : மார் 20, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:இருகூர் மற்றும் பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, சிங்காநல்லுார் அருகே பொதுமக்கள் தண்டவாளங்களை கடந்து செல்லும் ரோட்டில், ரயில்வே கேட் உள்ளது.
கடந்த, 11ம் தேதி ரயில்வே கேட்டை ஒரு லாரி சேதப்படுத்தியது. லாரி டிரைவர் லாரியுடன் தப்பினார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் கிரிஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன், 22 என்பவர் ரயில்வே கேட்டை சேதப்படுத்தியது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.

