ADDED : பிப் 14, 2026 05:23 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ. 31 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்ய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் மேட்டுப்பாளையம் வந்தார். அதிகாரிகளிடம், பணிகள் எப்போது முடிவடையும் என்ற விபரங்களை பொது மேலாளர் கேட்டறிந்தார்.
பயணிகள் சார்பில், மேட்டுப்பாளையம் கோவை இடையே இயக்கும் மெமு பாசஞ்சர் ரயிலில், பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால், எட்டு பெட்டியில் இருந்து 12 பெட்டியாக உயர்த்தி இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லா நேரமும் இயக்க வேண்டும். காட்டூர் ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். குறைகளை கேட்டு அறிந்த ரயில்வே பொது மேலாளர் ஆவன செய்வதாக கூறினார். முதன்மை திட்ட மேலாளர் கங்கா ராஜ் உள்பட ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

