ADDED : பிப் 14, 2026 05:22 AM

அன்னூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., ஐ.டி. அணி கோவை மண்டல பொறுப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அம்பாள் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வடக்கலூர் ஊராட்சி தொழிலாளர்கள், 'எங்களுக்கு சரியாக வேலை தருவதில்லை. வேலை செய்தவர்களுக்கு சம்பளம் உடனே வழங்குவதில்லை' என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சரவணன், சாய் செந்தில், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., தமிழக முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
