/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக வீடியோ எடுத்தால் ரயில்வே பரிசு காத்திருக்கிறது
/
சிறப்பாக வீடியோ எடுத்தால் ரயில்வே பரிசு காத்திருக்கிறது
சிறப்பாக வீடியோ எடுத்தால் ரயில்வே பரிசு காத்திருக்கிறது
சிறப்பாக வீடியோ எடுத்தால் ரயில்வே பரிசு காத்திருக்கிறது
ADDED : மார் 19, 2025 09:26 PM
கோவை; ரயில்வே செயலி, யு.டி.எஸ்., குறித்த ஒரு நிமிட வீடியோ எடுத்து பதிவிடுபவர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்பதிவில்லா டிக்கெட் பதிவு அமைப்பு(யு.டி.எஸ்.,) செயலி வாயிலாக, பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள், ஆகியவை பதிவு செய்ய முடிகிறது. இதனால், பயணிகள் டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க தேவையில்லை. அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.
இந்த செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் போட்டி அறிவித்துள்ளது. அதன்படி, செயலி குறித்த ஒரு நிமிட வீடியோ எடுத்து பதிவிட வேண்டும்.
அதிகளவு விரும்பப்படும் வீடியோவுக்கும், சிறந்த கருத்தை உள்ளடக்கிய வீடியோவுக்கும் ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. போட்டியில் பங்கேற்க வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 98405 69961, 75023 98686 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.