/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாதுகாப்பு படையை பலப்படுத்தணும்; போதைப்பொருள் கடத்தலை தடுக்க இது அவசியம்
/
ரயில்வே பாதுகாப்பு படையை பலப்படுத்தணும்; போதைப்பொருள் கடத்தலை தடுக்க இது அவசியம்
ரயில்வே பாதுகாப்பு படையை பலப்படுத்தணும்; போதைப்பொருள் கடத்தலை தடுக்க இது அவசியம்
ரயில்வே பாதுகாப்பு படையை பலப்படுத்தணும்; போதைப்பொருள் கடத்தலை தடுக்க இது அவசியம்
ADDED : செப் 17, 2025 11:40 PM

கோவை; கோவை மற்றும் வழித் தடங்களில் செல்லும் ரயில்கள் வாயிலாக, போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, கூடுத லாக பணியிடங்கள் உருவாக்கி, பாதுகாப்பு படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும், இதன் வழியாகவும் தினமும் 62 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். இதுதவிர, சரக்கு போக்குவரத்து, தபால் போக்குவரத்தும் கையாளப்படுகின்றன.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ரயில்கள் வழியாக கஞ்சா, ஹவாலா பணம், தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுக்கவும், நடந்தால் துரித நடவடிக்கை எடுக்கவும், ரயில்வே பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று மடங்கு அதிகரிப்பு கோவை ரயில்வே ஸ்டேஷன் ஆர்.பி.எப்.,--ல் ஒரு இன்ஸ்பெக்டர், ஐந்து எஸ்.ஐ., ஐந்து ஏ.எஸ்.ஐ., 49 கான்ஸ்டபிள்கள் என, 60 பேர் பணிபுரிகின்றனர். போத்தனுார் ஆர்.பி.எப்.,-ல் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., மூன்று ஏ.எஸ்.ஐ., 8 கான்ஸ்டபிள்கள் என, 13 பேர் பணிபுரிகின்றனர்.
போதுமான போலீசார் இல்லாததால், கடத்தலை தடுக்க முடியாமல் ரயில்வே பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். இருப்பினும் கூட, பணியில் உள்ள போலீசாரை கொண்டு ரோந்து, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருவதால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், பறிமுதல் செய்த போதைப் பொருட்கள் அளவு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
போலீசாருக்கு மனஉளைச்சல் 2022ல் 22 வழக்குகள் பதிவு செய்து, 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2025ல் 80 வழக்குகள் பதியப்பட்டு, 760 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீசாருக்கு, அதிக பணி கொடுப்பதால், பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், கூடுதல் பணியிடம் ஒதுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், 'ரோந்து பணிகள் தவிர, ஆன்லைன் பணிகளும் மேற்கொள்ள அறிவுறுத்த ப்படுகிறது. தண்டவாளம் கண்காணிப்புடன், ரயில்வே ஸ்டேஷன் ரோந்தும் செல்ல வேண்டும். ரயில்கள் வரும் போது ஒரு நி மிடத்தில், 500 - 600 பயணிகள் பிளாட்பாரங்களில் இறங்கி வருவர். அனைவரையும் சில போலீசாரை கொண்டு கண்காணிப்பது கடினம். போலீசார் எண்ணிக்கையை அதிகரித்து, பாதுகாப்பு படையை மறுசீரமைப்பு செய்ய வே ண் டும்' என்றனர்.