/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்களுக்கான போட்டி
/
ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்களுக்கான போட்டி
ADDED : மார் 27, 2025 12:14 AM

போத்தனூர்; கோவையில், தென்னக ரயில்வேக்குட்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்களுக்கான திறனாய்வு போட்டி, நேற்று துவங்கியது.
கோவை போத்தனூரில், ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.
நேற்று இங்கு மோப்ப நாய்களுக்கான திறனாய்வு போட்டிகளை, ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் ரத்தீஷ் பாபு தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.
13 நாய்கள் கீழ்படிதல், மனிதர்கள், சூட்கேஸ், கட்டடம் மற்றும் மண்ணில் வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை கண்டறிதல் போட்டிகளிலும், ஆறு நாய்கள் திருடப்பட்ட பொருட்களை கண்டறியும் போட்டிகளிலும் பங்கேற்றன.
போத்தனூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மேற்பார்வையில், சேலம், பாலக்காடு, சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் கோட்டங்கள் மற்றும் ஐ.சி.எப்., ஆகியவற்றிலிருந்து, மோப்ப நாய்கள் பங்கேற்றன.
இன்று போட்டிகள் நிறைவடைந்து பரிசு வழங்கப்படுகிறது.