sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி புதுப்பிப்பு 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

/

ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி புதுப்பிப்பு 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி புதுப்பிப்பு 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு

ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி புதுப்பிப்பு 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் விறுவிறு


ADDED : ஜூன் 04, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் புதுப்பிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. முகப்பு பகுதி புதுப்பிக்கப்பட்டு பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலை நோக்குப்பார்வையில் மேம்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், பயணியர் இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.

மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது.

அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.

அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ள கடந்தாண்டு ஏப்., மாதம் மின் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

அதில், வாகன நிறுத்தப்பகுதியில் பணி நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுவதுமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.மேலும், முகப்பு பகுதியில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, பூங்கா அமைக்க பணிகள் நடக்கிறது.

முகப்பு பகுதி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, பொள்ளாச்சி ஜங்ஷன் என தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதே போன்று மற்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இரு மாதங்களில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நிழற்கூரை அமைப்பு


பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், வாகனங்கள் நிறுத்தப்பகுதி திறந்த வெளியாக இருந்தது. இதனால், இருசக்கர வாகனங்கள், வெயிலிலும், மழையிலும் நின்றன. தற்போது, வாகன நிறுத்தப்பகுதி புதியதாக அமைக்கப்பட்ட இடத்தில், நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

எழுத்துப்பிழை


ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், பொள்ளாச்சி ஜங்ஷன் என, மும்மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில், தமிழிலில், 'பொள்ளாச்சி ஜங்' என்பதற்கு பதிலாக, 'பொள்ளாச்சி ஜ்' என, எழுத்துப்பிழையுடன் உள்ளது. பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள், இந்த எழுத்துப்பிழையை சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us