/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை; 359 பேர் கைது
/
ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை; 359 பேர் கைது
ADDED : பிப் 16, 2024 11:18 PM

மேட்டுப்பாளையம்:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,மேட்டுப்பாளையத்தில்,பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 359 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு, எம்.எல்.எப்., மேட்டுப்பாளையம் பொது தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து நேற்று மேட்டுப்பாளையத்தில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 359 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சூலுார்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம், சி.பி.எம்., எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.