/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி
/
ரயில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி
ADDED : ஏப் 21, 2025 09:28 PM

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், இயந்திரம் வாயிலாக தண்டவாளம் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாளத்தை இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்யும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இதில், தண்டவாளத்தில் இருக்கும் தேவையற்ற ஜல்லிக்கற்கள், அடிப்பகுதியில் உள்ள சிறிய கற்கள் மற்றும் மண் போன்றவைகள் அகற்றப்பட்டு வருகிறது.
தற்போது, மெயின் லைன் சுத்தம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பிளாட்பாரம் 1 மற்றும் 2 சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், தண்டவாளத்தில் செல்லும் ரயில் குலுங்காமல் சீராக செல்லும், என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட சில பகுதிகளில் ரயில்கள் செல்லும் போது சீரான ஓட்டம் இல்லை என, ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி, தண்டவாளம் சீரமைக்கும் பணி நடக்கிறது. தண்டவாளத்துக்கு கீழே அதிகப்படியாக இருக்கும் கற்கள் அகற்றப்பட்டு, சீரமைக்கப்படுகிறது,' என்றனர்.