தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே யார்டு புதுப்பிப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்வே யார்டு புதுப்பிப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்வே யார்டு புதுப்பிப்பு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மே 27, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : போத்தனுார் ரயில்வே யார்டு புதுப்பிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு நாளை பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாலக்காட்டில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும், பாலக்காடு டவுன் - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை, வடகோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்கள் செல்லாது.

பாலக்காடு - கோவை (66606), பொள்ளாச்சி - கோவை(56110), சொரனுார் - கோவை (56604) ஆகிய ரயில்கள், நாளை போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66611) ரயில் நாளை கோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனுாரில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்படும் போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612) மெமு ரயில், நாளை போத்தனுாருக்கு பதில் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, காலை 9:55 மணிக்கு புறப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us