/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் மீண்டும் மழை 41.10 அடிக்கு தண்ணீர் இருப்பு
/
சிறுவாணியில் மீண்டும் மழை 41.10 அடிக்கு தண்ணீர் இருப்பு
சிறுவாணியில் மீண்டும் மழை 41.10 அடிக்கு தண்ணீர் இருப்பு
சிறுவாணியில் மீண்டும் மழை 41.10 அடிக்கு தண்ணீர் இருப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:10 PM
கோவை; சிறுவாணி அணை பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது; நீர் மட்டம், 41.10 அடியாக உயர்ந்திருக்கிறது.
கோவைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணை பகுதியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தது. நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது. மாநகராட்சி மற்றும் வழியோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் எடுக்கப்பட்டதால், நீர் மட்டம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.
சில நாட்களுக்கு முன், 40 அடிக்கும் கீழாகச் சென்றது.
இச்சூழலில், அணை பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம், 22 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 5 மி.மீ., பதிவாகியது.
மழைப்பொழிவு தொடர்வதால், நீர் மட்டம் உயரத் துவங்கியுள்ளது. நேற்றைய தினம் 41.10 அடிக்கு நீர் இருப்பு இருந்தது; குடிநீர் தேவைக்காக, 10.26 கோடி லிட்டர் தருவிக்கப்பட்டது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''கேரளா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், அடுத்த, 10 நாட்களில் தென்மேற்கு பருவ மழை வலுப்பெறத் துவங்கும். கோவையின் மேற்குப்பகுதி, சிறுவாணி மலைப்பகுதி, வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகள் பயனடையும்.
மாநகராட்சி பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் பருவ மழை வலுப்பெறும் சமயத்தில், கோவை 'குளுகுளு'வென இருக்கும்,'' என்றார்.