ADDED : ஏப் 09, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகலில் நடமாடவே மக்கள் அச்சப்படுகின்றனர். இளநீர், குளிர்பானங்களை பருகி ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, 'மாவட்டத்தில் வரும் 12ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில், சில இடங்களில் லேசான மழையும், மற்ற பகுதிகளில் லேசான தூறல் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரியாக இருக்கும்' என, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
