ADDED : மே 24, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கனமழை இருக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 5:45 மணிக்கு பின், பல்வேறு பகுதிகளிலும், கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், டவுன்ஹால், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம். ரத்தினபுரி, கணபதி, சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கனமழை இருந்தது. பல்வேறு ரோடுகளிலும் மழைநீர் தேங்கியது.