/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, நீலகிரியில் இன்று, நாளை மழை
/
கோவை, நீலகிரியில் இன்று, நாளை மழை
ADDED : மார் 07, 2026 06:16 AM
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்றும், நாளையும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிற பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

