/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரியில் மழை கேரட் விலை சரிவு... பீன்ஸ் உயர்வு
/
நீலகிரியில் மழை கேரட் விலை சரிவு... பீன்ஸ் உயர்வு
நீலகிரியில் மழை கேரட் விலை சரிவு... பீன்ஸ் உயர்வு
நீலகிரியில் மழை கேரட் விலை சரிவு... பீன்ஸ் உயர்வு
ADDED : டிச 08, 2025 05:41 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், 3 ஆயிரம் மூட்டை கேரட்டுகள், 2 ஆயிரம் மூட்டை பீன்ஸ், வருவது வழக்கம்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால், கேரட் அறுவடையை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதே சமயம் பீன்ஸ் அறுவடை பாதிப்படைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது. நேற்று முன் தினம் ஒரு கிலோ ரூ.50க்கும் மேல் விற்பனை ஆனது. மழையால் கேரட் அழுகிவிடக்கூடாது என்பதற்காக, அறுவடையை விவசாயிகள் அதிகப்படுத்தி உள்ளனர்.
இதனால் நேற்று சுமார் 85 வண்டிகள் லோடு வந்தன. மழையினால் பீன்ஸ் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
பீன்ஸ் செடிகளில் இருந்து கீழே விழுவது, செடிகள் சாய்வது போன்ற பாதிப்புகளால் வரத்து குறைந்துள்ளது. நேற்று பீன்ஸ் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆனது. நேற்று முன் தினம் ரூ.60 வரை விற்பனை ஆனது.
இவ்வாறு, அவர் கூறினார்.----

