/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ., கல்லுாரியில் கருத்தரங்கம்
/
பி.ஏ., கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : டிச 08, 2025 05:38 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி பி.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியியல் சங்கம் சார்பில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அடிப்படை அறிவியல் என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது.
பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
கோவை பாரதியார் பல்கலை வேதியியல் துறை உதவி பேராசிரியர் கார்த்திக், மின்வேதியியல் ஆற்றல் மாற்றம், ஆற்றல் சேமிப்பு சாதனங்களின் அடிப்படை விதிகள் குறித்து விளக்கினார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாமாண்டு துறைத்தலைவர் யுவராஜா, பிற துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

