தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26 வரை மழை


ADDED : ஆக 21, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது.

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில்,1 செ.மீ., மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்யும். இன்று முதல், 24ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us