/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாரல்மழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
சாரல்மழை; தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜன 08, 2024 01:17 AM

வால்பாறை;வால்பாறையில் பரவலாக பெய்து வரும் சாரல்மழையால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
வால்பாறையில் தேயிலை தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
இது தவிர காபி, மிளகு, ஏலம் போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. வால்பாறையில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள எந்த ஒரு அணையும் நிரம்பவில்லை. இதனால் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் வடகிழக்குப்பருவ மழை குறைந்துள்ள நிலையில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில்கடந்த ஐந்து நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகப்பட்சமாக மேல்நீராறில், 29 மி.மீ., மழை பெய்துள்ளது.