/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெய்யென பெய்யும் மழை! நிரம்பி வழியும் அணைகள்' பாசன விவசாயிகள் நிம்மதி
/
பெய்யென பெய்யும் மழை! நிரம்பி வழியும் அணைகள்' பாசன விவசாயிகள் நிம்மதி
பெய்யென பெய்யும் மழை! நிரம்பி வழியும் அணைகள்' பாசன விவசாயிகள் நிம்மதி
பெய்யென பெய்யும் மழை! நிரம்பி வழியும் அணைகள்' பாசன விவசாயிகள் நிம்மதி
ADDED : ஜூலை 30, 2025 08:21 PM
- நிருபர் குழு -
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன (பி.ஏ.பி.,) திட்டம், அறிவியலும், பொறியியலும் இணைந்த, 19ம் நுாற்றாண்டின் மகத்தான திட்டம் என, வல்லுநர்களால் போற்றப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆறுகளின் குறுக்கே, அணைகள் கட்டி, தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி, பாசனத்துக்கு பயன்படுத்துவதே பி.ஏ.பி., திட்டத்தின் நோக்கமாகும்.
பெரிய அளவிலான தொழில்நுட்பம் இல்லாத அந்த கால கட்டத்தில், மனித சக்திகளை மட்டும் நம்பி, பொறியாளர்களின் உழைப்பினால் சங்கிலி தொடர் போல அணைகளை கட்டி உருவாகிய திட்டம் முழுக்க முழுக்க புவிஈர்ப்பு சக்தியில், இன்னும் பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கடந்த, 1958ல் 30.50 டி.எம்.சி., நீர் எதிர்பார்ப்புடன் இத்திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக, தமிழக - கேரள இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு, ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி., சோலையாறு அணையில் இருந்து 12.3 டி.எம்.சி., என, கேரள மாநிலத்துக்கு 19.55 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது.
பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், சர்க்கார்பதி மின்நிலையத்திலிருந்து திருமூர்த்தி அணைக்கு, 49.3 கி.மீ., நீளமுள்ள காண்டூர் கால்வாயில் கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின், பாசனத்துக்கு வினியோகிக்கப்படுகிறது. அதேபோன்று, ஆழியாறு, அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் பாசனத்துக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்தாண்டு, மே மாதம் இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, இரு மாதங்களாக தீவிரமாக பெய்தது. இதனால், பாசன திட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.