/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலத்த காற்றுடன் மழை; வாழை மரங்கள் சேதம்
/
பலத்த காற்றுடன் மழை; வாழை மரங்கள் சேதம்
ADDED : மே 01, 2025 11:46 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
சிறுமுகை, வச்சினம்பாளையம், மூலத்துறை, லிங்காபுரம், கூத்தாம்பட்டி பிரிவு, அம்மன் புதூர், உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், நேந்திரன், கதலி, பூவன், ஆகிய வாழைகள் அதிக அளவில் பயிர் செய்துள்ளனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு பலத்த சூறாவளி காற்று இப்பகுதிகளில் வீசியது. மழையும் பெய்தது. சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து சிறுமுகை லிங்காபுரம், சம்பரவள்ளி பகுதி விவசாயிகள் கூறியதாவது: சிறுமுகை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர் செய்துள்ள, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன. இதுவரை செலவு செய்ததைவிட, இந்த மரங்களை விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த ஆகும் செலவு அதிகமாகும். எனவே சேதமடைந்த வாழைகளை வேளாண் மற்றும் வருவாய் துறையினர் கணக்கெடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
சிறுமுகை - சக்தி சாலையில் விழுந்த மரம் ஒன்றினை, தீயணைப்பு துறையினர், போலீசார் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

