/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2030க்குள் கோவை 'கலர்புல்'ஆக வரப்போகிறது 'வானவில்' திட்டம்
/
2030க்குள் கோவை 'கலர்புல்'ஆக வரப்போகிறது 'வானவில்' திட்டம்
2030க்குள் கோவை 'கலர்புல்'ஆக வரப்போகிறது 'வானவில்' திட்டம்
2030க்குள் கோவை 'கலர்புல்'ஆக வரப்போகிறது 'வானவில்' திட்டம்
ADDED : மார் 01, 2026 06:47 AM

கோவை: 2030ம் ஆண்டுக்குள் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், வானவில்லின் ஏழு வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
'என் ஊர் என் கனவு' திட்டத்தின் கீழ், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற தலைப்பில் தன்னார்வலர்கள் மூலம் மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.
சுகாதாரம், தொழில், கல்வி, வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 36 துறைகளில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து ஏற்கனவே நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கருத்துகள் அனைத்தையும் தொகுத்து, 'விஷன் 2030' திட்டத்தின் கீழ் மாவட்ட வளர்ச்சிக்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்ட வளர்ச்சியை வானவில்லின் ஏழு வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, புத்தாக்கம், பசுமை வளர்ச்சி, இளைஞர் பங்களிப்பு, இயற்கை வேளாண்மை, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்த திட்டமிடவும்; நிலையான பொருளாதார வளர்ச்சி, தரமான பொது சேவை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் நடவடிக்கைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையில், வருகிற 3ம் தேதி 'கனவு மெய்ப்பட' திட்டத்தை முதல்வர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம், மாவட்ட வளர்ச்சி தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

