/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் வாழைத்தார் வரத்தும், விலையும் சரிவு
/
மழையால் வாழைத்தார் வரத்தும், விலையும் சரிவு
ADDED : மே 29, 2025 11:16 PM

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் மழை காரணமாக வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், கதளி கிலோ - 30 மற்றும் சாம்பிராணி --- 45 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த வாரத்தை விட தற்போது கதளி --- 10 மற்றும் சாம்பிராணி --- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஒரு வாரமாக பெய்யும் கனமழையால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. செவ்வாழை, நேந்திரன், பூவன், ரஸ்தாளி வாழைத்தார்கள் வரத்து இல்லை.
மேலும், கதளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார்கள் மட்டும் வரத்து இருந்தது. அதுவும், கடந்த வாரத்தை விட விலை குறைந்தது. மழையால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகை குறைவாக இருந்தது.
இவ்வாறு, கூறினர்.