/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டைக்கண் பாலத்தில் மழைநீர்; மோட்டார் வைத்து வெளியேற்றம்
/
இரட்டைக்கண் பாலத்தில் மழைநீர்; மோட்டார் வைத்து வெளியேற்றம்
இரட்டைக்கண் பாலத்தில் மழைநீர்; மோட்டார் வைத்து வெளியேற்றம்
இரட்டைக்கண் பாலத்தில் மழைநீர்; மோட்டார் வைத்து வெளியேற்றம்
ADDED : அக் 15, 2024 10:23 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், தண்ணீர் தேங்காமல் இருக்க டிராக்டரில், மோட்டார் பம்ப்செட் வைத்து வெளியேற்றி, நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்கிறது. இதையடுத்து, பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாலத்தின் கீழ் நீர் முறையாக செல்ல துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான தளவாடங்கள் இருப்பு வைக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் மழைநீர் தேங்காமல் இருக்க டிராக்டரில், மோட்டார் பம்ப்செட் வைத்து நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை பெய்யும் நிலையில், பாலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் கீழ் மழைநீர் தேங்காத வகையில் துார்வாரப்பட்டது.
தற்போது, பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள இடமான இரட்டைக்கண் பாலத்தில், மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏதுவாக டிராக்டரில் மோட்டார் பம்ப்செட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஊழியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் வசதிக்காக தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றவும், ரோடுகளில் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.