ADDED : அக் 30, 2026 12:49 AM

சூர்யா நகர் 2-வது வீதி விரிவாக்கத்தில் இணைப்பு சாலை அமைக்கும் பணி முடியவில்லை மழை காலத்தில் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது.
நாராயணன் அண்ணாமலை, ஒண்டிபுதுார்.
2. சிங்காநல்லுாரில் மின்கம்பி சேதம்
சிங்காநல்லுார், ஸ்ரீ மருதம் காம்ப்ளக்ஸ் அருகே மின்கம்பி சேதமடைந்துள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறோம்.
– அஜய், சிங்காநல்லுார்.
3. ஜி.வி. ரெசிடென்சியில் குப்பை குவியல்
ஜி.வி. ரெசிடென்சி– ஃபன் மால் ரோட்டில் உள்ள மலர் மருத்துவமனை எதிரே குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
– மோகன் குமார், ஜி.வி. ரெசிடென்சி.
4. கணபதியில் கட்டட கழிவுகள்
மாநகராட்சி வடக்கு மண்டலம், 29-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி, வி.என்.எஸ்., நகரில் உள்ள முக்கிய சாலையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் வேறு இடத்திலிருந்து கட்டட கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
– ஜீவானந்தம், கணபதி.
5. குனியமுத்துாரில் இருள்
குனியமுத்துார், பி.கே. புதூர், பாலு கார்டன் பேஸ்- 2 யில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருளில் மூழ்கி, மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
– கீதா, குனியமுத்துார்.
6. வடவள்ளியில் வாகனங்கள் தடுமாற்றம்
வடவள்ளி சாலையில் சீரமைப்பு பணிக்காக சாலை முழுவதும் கற்கள் கொட்டப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
– உன்னிகிருஷ்ணன், வடவள்ளி.
7. கவுண்டம்பாளையத்தில் சீரமைக்காத சாலை
கவுண்டம்பாளையம், 17-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் நகர் குடியிருப்பில், 2025-ம் ஆண்டு துவக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. பணி முடிந்து ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் சாலை சீரமைக்கவில்லை.
– நடராஜன், டாக்டர் நகர்.
8. ஆர்.எஸ்.புரத்தில் ஆக்கிரமிப்பு
ஆர்.எஸ்.புரம் மேற்கு பகுதியில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
– ராமமூர்த்தி, கோவை.
