/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மக்களிடையே விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மக்களிடையே விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மக்களிடையே விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மக்களிடையே விழிப்புணர்வு
ADDED : ஜன 28, 2025 11:17 PM

வால்பாறை; வால்பாறையில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.
வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுற்றுலா பயணியர் திறந்தவெளியில் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது. முன்னதாக வால்பாறை நகரில் இருந்து, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேசியதாவது: துாய்மை இந்தியா திட்டம் குறித்து, பொதுமக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் கழிவுகளை தெருக்கள், பொதுஇடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் விதமாக, வால்பாறையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் பாஸ்கர், அன்பரசன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

