/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
/
சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
சமரச தீர்வு மையம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 13, 2025 08:47 PM

சூலுார்; சூலுாரில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை, நீதிபதிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சிறப்பு சமரச தீர்வு முகாம், ஜூலை 1 முதல், செப்.30 வரை நடக்கிறது. கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, குடும்ப பிரச்னை, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, செக் மோசடி, பாகப்பிரிவினை, தொழிலாளர் வழக்கு, வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் செய்து வைக்கப்படுகிறது.
சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சூலுார் கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. சூலுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷம் மற்றும் சமரச தீர்வு மைய உறுப்பினர்கள் கவின் பாரதி, விஜயகுமார், வக்கீல்கள் தமிழ்செல்வி, ராஜா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.
சூலுார் கோர்ட் வக்கீல்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.