/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
500 கிலோ குட்கா பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
/
500 கிலோ குட்கா பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
ADDED : பிப் 20, 2025 11:34 PM
கோவை; பீளமேடு பகுதியில் குட்கா விற்பனை செய்த ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 500கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பீளமேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, அவர் ராஜஸ்தானை சேர்ந்த கணபத், 24 என்பதும், அவர் பீளமேடு பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும்,கோவில்பாளையம் பகுதியில் குடோன் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 500கிலோ குட்கா பொருட்கள் இருந்தது.
இதையடுத்து, போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வாலிபரை சிறையில் அடைத்தனர்.

