ADDED : செப் 07, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
கோவை: சின்னவேடம்பட்டி ஏரிக்கு உபரி நீர் செல்வதற்காக, கணுவாய் தடுப்பணையில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்கு ராஜவாய்க்கால் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘விஸ்வநாதபுரம் பகுதியில் ராஜவாய்க்காலின் அகலத்தை குறைக்கும் விதமாக, மாநகராட்சி கட்டுமானங்களை ஏற்படுத்தி ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைகாலங்களில் விஸ்வநாதபுரம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி ராஜவாய்க்காலை பராமரிக்க வேண்டும்’ என்றனர்.
