/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9ல் ரக்ஷா பந்தன் பண்டிகை; ராக்கி கயிறு விற்பனை ஜோர்
/
9ல் ரக்ஷா பந்தன் பண்டிகை; ராக்கி கயிறு விற்பனை ஜோர்
9ல் ரக்ஷா பந்தன் பண்டிகை; ராக்கி கயிறு விற்பனை ஜோர்
9ல் ரக்ஷா பந்தன் பண்டிகை; ராக்கி கயிறு விற்பனை ஜோர்
ADDED : ஆக 03, 2025 09:41 PM

கோவை; கோவையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, கடைகளில் ராக்கி கயிறு விற்பனை சூடுபிடித்துள்ளது.
சகோதர பாசத்தை போற்றும் வகையில் வட மாநிலங்களில் வெகு விமர்சையாக ரக்ஷா பந்தன் பண்டிகை, வரும் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், கோவையில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி, ரக்சா பந்தன் விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். வட மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவிகளும் ராக்கி கயிறுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையொட்டி, நகரின் பல்வேறு கடைகளில் பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட ராக்கிக் கயிறுகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.20 முதல் தொடங்குகிறது. ரக்ஷா பந்தன் நாளில், சகோதரர்களின் நலனுக்காகப் பெண்கள் சிறப்புப் பிரார்த்தனை செய்து, அவர்களின் கைகளில் ராக்கிக் கயிறுகளைக் கட்டுவார்கள். இந்த நிகழ்வு, சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் உறவை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

