/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: மக்களுக்கு அட்சதை வினியோகம்
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: மக்களுக்கு அட்சதை வினியோகம்
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: மக்களுக்கு அட்சதை வினியோகம்
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: மக்களுக்கு அட்சதை வினியோகம்
ADDED : ஜன 08, 2024 01:15 AM
பொள்ளாச்சி:அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும், 22ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதனால், அயோத்தி நகரமே களை கட்டியுள்ளது.
இதையொட்டி, பொள்ளாச்சி அருகே ஜக்கார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதி பெருமாள் கோவிலில், கொங்கு மண்டல யாது நந்தன நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அயோத்தியில் இருந்து வந்து இருக்கும் அருட்பிரசாதங்களை வினியோகித்தார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், ராமஜென்ம பூமி அட்சதை, கும்பாபிேஷக அழைப்பிதழ் மற்றும் ராமர் கோவில் படம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், ராம ஜென்ம பூமி பிரதிஷ்டை அழைப்பிதழ், அட்சதை முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.