ADDED : பிப் 20, 2026 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட பள்ளி வாசல்களில் ஜமாஅத்தின் ரம்ஜான் பிறை காணல் கூட்டம் ஜமாத்களில் நடந்தது. ஜமாத் தலைவர் ஹாஜி காஜா முஹையதீன் ரத்தினபுரி நால்வர் லேஅவுட் தாருல் குர் ஆன் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலிலும், கோவை விவசாய கல்லுாரி பள்ளி ஜமாஅத்திலும் நடந்த பிறை காணும் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுசெயலாளர் ஹாஜிமுஹம்மது அலியும் பங்கேற்று பிறை பார்த்தனர்.
கோவையில் புதனன்று ரம்ஜான் பிறை தெரியவில்லை என்றாலும், பிற ஊர்களில் பிறை தென்பட்டதை உறுதி செய்து தமிழ்நாடு தலைமை காஜி மவுலானா உஸ்மான் அன்று இரவு தராவீஹ் தொழுகையும், ஸஹர் உணவும் உண்டு வியாழன் முதல் நோன்பு தொடங்குவதாக அறிவித்துள்ளார். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், மவுலவிஅப்துல் ரஹ்மான் ஜலாலியும் பங்கேற்றனர்.

