தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்குணம் உருவாக்கி தரும் ரமலான் நோன்பு'

 'தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்குணம் உருவாக்கி தரும் ரமலான் நோன்பு'

 'தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்குணம் உருவாக்கி தரும் ரமலான் நோன்பு'


ADDED : பிப் 20, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: ' 'மனித வாழ்க்கையில், தன்னம்பிக்கையும், நல்ல ஒழுக்கம், நல்ல குணங்களை உருவாக்கித் தருவதற்கு, நோன்பு முக்கிய காரணமாக உள்ளது,'' என, மேட்டுப்பாளையம் காட்டூர் பள்ளிவாசல், தலைமை இமாம் முகமது இல்யாஸ் பாகவி தெரிவித்தார்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இதுகுறித்து இவர் கூறியதாவது:

ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுமையாக நோன்பு இருப்பது, இறைவனின் கட்டளை. இந்த நோன்பின் வாயிலாக, பசியால் வாடுவோரின் நிலையை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்ள முடிகிறது. நோன்பு இருப்பதன் வாயிலாக, உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தலைமைப் பண்புக்கான தகுதிகளை, நோன்பு சொல்லிக் கொடுக்கிறது.

சுய கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமலும், குடிக்காமலும் தன்னை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஏற்படுகிறது.

மனித வாழ்க்கையில், தன்னம்பிக்கையும், நல்ல ஒழுக்கம், நல்ல குணங்களை உருவாக்கித் தருவதற்கு, நோன்பு முக்கிய காரணமாக உள்ளது; அதேபோன்று திட்டமிடல் வழி வகுக்கிறது.

நோன்பு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரை தயார்படுத்துகிறது. உள்ளம் இறைவனை நெருங்கவும், மூளைக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. செரிமான மண்டலம் மேம்பட்டு, நச்சுகள் வெளியேறுகின்றன. வாழ்க்கையில் மிக முக்கியமானது நேரத்தை திட்டமிடுதல். இது நோன்பு சொல்லிக் கொடுக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us