/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள்; போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி
/
ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள்; போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி
ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள்; போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி
ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள்; போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி
ADDED : ஜூன் 26, 2025 11:23 PM

கோவை; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கல்லுாரியின், போதைப்பொருள் தடுப்புக்குழு, கோவை மாநகர போலீஸ், யுவா கிளப் ஆகியவை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் கல்லூரி கலையரங்கில் நடந்தது.
யுவா கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜினி ஜேம்ஸ் வரவேற்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆனமலைஸ் டொயோட்டோ இயக்குநர் சவுமியா காயத்ரி, ஆர்த்தோ ஒன் இயக்குநர் கரோலின் ராஜன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.