/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
/
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 14, 2025 11:26 PM

கோவை; கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்களுக்கு, பாராட்டு விழா மற்றும் 2016 முதல் 2024 பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். முதல்வர் சவுந்தரராஜன், முன்னாள் மாணவர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். மதிய அமர்வில், சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விழா மலர் வெளியிடப்பட்டது. தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சங்கத்தலைவர் வீணா, செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.