/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கான எறிபந்து போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் வெற்றி
/
பெண்களுக்கான எறிபந்து போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் வெற்றி
பெண்களுக்கான எறிபந்து போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் வெற்றி
பெண்களுக்கான எறிபந்து போட்டி; ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் வெற்றி
ADDED : பிப் 17, 2025 11:16 PM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், பெண்களுக்கான எறிபந்து போட்டி நடந்தது.
கோவையில் உள்ள எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை கீழ் இயங்கும் கலை, அறிவியல், இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவ கல்லூரி, பார்மசி, பிசியோதெரபி கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடந்தன. 8 அணிகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளும், 'நாக் அவுட்' முறையில் நடந்தன.
போட்டியை, கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை, 2:0 என்ற நேர் செட்டுகளில் வென்று முதல் இடத்தை பிடித்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு, சுழல் கோப்பை சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் செய்து இருந்தார்.

