/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட்; ஸ்ரீ ஜெய ே ந்திர சரஸ்வதி பள்ளி சாம்பியன்
/
ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட்; ஸ்ரீ ஜெய ே ந்திர சரஸ்வதி பள்ளி சாம்பியன்
ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட்; ஸ்ரீ ஜெய ே ந்திர சரஸ்வதி பள்ளி சாம்பியன்
ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட்; ஸ்ரீ ஜெய ே ந்திர சரஸ்வதி பள்ளி சாம்பியன்
ADDED : ஜன 27, 2025 12:43 AM

கோவை; ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, மெட்ரிக் சி.பி.எஸ்.சி., மற்றும் சர்வதேச பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கான மாவட்ட அளவிலான ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.
கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிகளை பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் ராமலிங்கம் செட்டியார் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில், ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணியை வென்றது.
இரண்டாவது போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை,10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இறுதிப் போட்டி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணிகளுக்கு இடையே நடந்தது. முதலில் பேட் செய்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி விக்கெட் இழப்பின்றி, 10 ஓவர்களில், 147 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன், அபர்ணா, 37 பந்துகளில், 62 ரன்கள், மற்றொரு வீராங்கனை, பிரதன்யா, 37 பந்துகளில், 50 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி, 10 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் வாயிலாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.