/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமலிங்கம் செட்டியார் பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
/
ராமலிங்கம் செட்டியார் பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
ராமலிங்கம் செட்டியார் பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
ராமலிங்கம் செட்டியார் பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
ADDED : பிப் 12, 2024 12:58 AM

கோவை;ராமலிங்கம் செட்டியார் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தின விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில், வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவ மாணவியர் சிவப்பு, மஞ்சல், நீலம், பச்சை என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் நீல நிற அணி 254 புள்ளிகளுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. மஞ்சள் நிற அணி 189 புள்ளிகள் எடுத்து, இரண்டாமிடம் பிடித்தது.
விளையாட்டு தின விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற ராமலிங்கம் செட்டியார் பள்ளி மாணவர்களுக்கும், விளையாட்டு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்ற ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி மாணவர்களுக்கும், அங்கப்பா கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் ரவிச்சந்திரன், டி.ஏ., ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் அங்கப்பன் ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.