ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளிக்கு கிடைத்தது கம்ப்யூட்டர் ஆய்வகம்
ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளிக்கு கிடைத்தது கம்ப்யூட்டர் ஆய்வகம்
ADDED : பிப் 26, 2026 07:29 AM

அ நிறம் | அளவு
கோவை: ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், புதிய கம்ப்யூட்டர் ஆய்வகம் நேற்று மாணவர்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அன்னபூர்ணா ஸ்ரீ கவுரிசங்கர் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு நிதியின் கீழ் 79 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட இந்த ஆய்வகம் மற்றும் சிறிய அரங்கினை, கோவை எம்.பி.ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தனர். 453 மாணவர்கள், 83 மாணவியர் என 536 பேருக்கு பயனளிக்கும்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீகவுரி சங்கர் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ்பாபு, ஜெகன் தாமோதரசாமி, விவேக் சீனிவாசன், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், உதவி கமிஷனர் நித்யா, உதவி செயற்பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
