/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரமணி மஹிந்திராவில் புதிய கார் அறிமுகம்
/
ரமணி மஹிந்திராவில் புதிய கார் அறிமுகம்
ADDED : ஜூலை 20, 2025 10:59 PM

கோவை; ரமணி மஹிந்திரா ஷோருமில், மஹிந்திராவின் புத்தம் புதிய எக்ஸ்.யு.வி., 3எக்ஸ்ஒ ரேவ்எக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. ரமணி மஹிந்திராவின் பொது மேலாளர் சந்திரமவுலி, விற்பனை மேலாளர் இளம்பரிதி ஆகியோர், புதிய காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தனர்.
பொதுமேலாளர் சந்திரமௌலி கூறுகையில், ''மகேந்திரா எக்ஸ்.யு.வி. 3எக்ஸ்ஒ ரேவ்எக்ஸ் என்பது காம்பாக்ட் எஸ்.யு.வி., பிரிவை மறுவரையறை செய்வதில், ஒரு துணிச்சலான படியாகும். இது வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற மதிப்பை வழங்க சக்தி, ஸ்டைல் மற்றும் மேம்பட்ட அம்சங்களை ஒருங்கிணைக்கிறது,'' என்றார்.
விற்பனை மேலாளர் இளம்பரிதி பேசுகையில், ''ரேவ்எக்ஸ் புதிய தலைமுறை ஓட்டுனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.94 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இ.எம்.ஐ., ரூ.10 ஆயிரத்திலிருந்து துவங்குகிறது,'' என்றார்.
அறிமுக நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிரத்யேக முன்னோட்டங்கள், சோதனை ஓட்டங்கள் மற்றும் சிறப்பு முன்பதிவு சலுகைகள் வழங்கப்பட்டன.