ADDED : ஏப் 22, 2026 05:40 PM
அ நிறம் | அளவு
கோவை: பெருமாள் கோயில்களில் ராமானுஜர் ஜெயந்தி நேற்று நடந்தது.
பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன் வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில்களில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் விமரிசையாக நடந்தது. ராமானுஜர் நுாற்றந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. திவ்யநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
