/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் ரதம் மேட்டுப்பாளையம் வந்தது
/
ராமர் ரதம் மேட்டுப்பாளையம் வந்தது
ADDED : ஏப் 02, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள, ஆஞ்சநேயர் ஆசிரமத்தில் இருந்து, ஸ்ரீ ராமர் ரதம் புறப்பட்டது. இந்த ரதம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் புனித யாத்திரை மேற்கொள்ளஉள்ளன.
மேட்டுப்பாளையம் வந்த ஸ்ரீ ராமர் ரதத்துக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவில் முன்பு, சர்வ மங்கள தியான பீட அன்பர்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஸ்ரீ ராம நாம ஜெபம் சொல்லப்பட்டது. அதன் பின் ரதம் கோவைக்கு புறப்பட்டு சென்றது.
சுவாமி வேதாந்தனந்தா, சரவணகுமார் ஆகியோர், தமிழகம் முழுவதும் ஸ்ரீ ராமர் ரதம் செல்வதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்துள்ளனர்.

